‘மெர்சல்’ ரீரிலீஸ் மற்றும் ‘ஜனநாயகன்’ டீசரும் ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

Web Ads

விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த தகவல்கள் காண்போம்..

விஜய்யின் அரசியல் பேசும் கடைசிப் படமாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படம் உருவாகி வருகிறது. இப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

முன்னதாக, இப்படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் அல்ல எனவும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் இப்படம், தற்போது விநியோக உரிமை பற்றிப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விஜய் பிறந்த நாளன்று ‘மெர்சல்’ திரைப்பட மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது. ஜூன் 22-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறார் விஜய். அன்று ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக கட்சியினர் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட இருக்கிறார்கள். அன்று, ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது.

இந்தக் கொண்டாட்டத்தைத் தாண்டி ‘மெர்சல்’ படமும் அன்று மறுவெளியீடு செய்ய முடிவு செய்திருக்கிறது படக்குழு. இது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.  அட்லி இயக்கத்தில் விஜய், எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

vijaj act in jananayagan movie teaser and fans happy