‘விடாமுயற்சி’ படம் பார்த்தபின் அஜித் என்ன சொன்னார் தெரியுமா?: மகிழ் திருமேனி தகவல்..
‘இதுமாதிரி படங்களை நான் தொடர்ந்து பண்ண ஆசைப்படுறேன்’ என அஜித் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..
மகிழ் திருமேனி இயக்கத்தில், ‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.
படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அவ்வகையில், படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
‘படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை என நான் மிகவும் அப்செட்டில் இருந்தேன். அப்போது அஜித் சார் என்னை அழைத்து,
கவலைப்படாதீங்க மகிழ், பண்டிகை நாள்ல நாம வரலேன்னா என்ன, நம்ம படம் ரிலீஸ் ஆகுற அந்த நாள் பண்டிகையா மாறும். அவருடைய சில வார்த்தைகள் அப்படியே நடக்கும். நானே இதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
விடாமுயற்சி டைட்டில் பற்றி அஜித் சார் சொல்லும்போது, டைட்டிலுக்கு ஒரு பவர் இருக்கு மகிழ். ‘விடாமுயற்சி’ டைட்டில் நம்மளை டெஸ்ட் பண்ணுது. அந்த டைட்டில் என் பெயரையும் கொண்டிருக்கு. அதனால், அந்த டைட்டிலுக்கு நாம உண்மையாக இருக்கணும்.
இந்தப்படம் நம்முடைய கெரியரில் ஒரு மறக்க முடியாத படமாக அமையும். நான் நினைச்சதைவிட படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. இதுமாதிரி படங்களை தான் நான் தொடர்ந்து பண்ண ஆசைப்படுறேன்’ என அஜித் சொன்னதாக மகிழ் திருமேனி கூறியிருக்கிறார்.
இத்தகவல், ‘தல’ ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி தெறிக்கிறது.
