vetrimaran
தனுஷை வைத்து தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வந்த வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கும் பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளது.

Vetrimaran join hands with suriya in new movie – பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு, தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் வெற்றிமாறன் மாறியுள்ளார்.

Asuran Movie Review : படம் பக்கா.. ஆனால்? | Ausran Review | Asuran FDFS | Dhanush | Manju Warrier | Ken | Ammu Abhirami | Tamil Cinema Movie Review

தனுஷ் நடிப்பில் இவர் இயக்கிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சூரியை ஹீரோ ஆக்கியது ஏன்? என்ன கதை? – மனம் திறக்கும் வெற்றிமாறன்

இந்நிலையில், அசுரன் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு புதிய படத்தை தயாரிக்க விரும்புகிறாராம்.

எனவே, இது தொடர்பாக இரு தரப்பிடமும் அவர் பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசுரன் படத்திற்கு பின் நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து வெற்றிமாறன் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

சூர்யாவோடு வெற்றிமாறன் இணைந்தால் சூரியின் படம் தள்ளிப்போகும் அல்லது கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here