Vasuki Bhaskar About Thala Ajith
Vasuki Bhaskar About Thala Ajith

தமிழ் சினிமாவின் சுஷாந்த் ராஜ்புட் சிங்குகளே அஜித்தை நினைத்துப் பாருங்கள் என இளையராஜாவின் மகள் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Vasuki Bhaskar About Thala Ajith : பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட். இவர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த படத்தின் மூலம் அவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தனர். கிடுகிடுவென வளர்ந்து வந்த அவரின் வளர்ச்சி பிடிக்காத பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அவரின் வாய்ப்புகளை தட்டிப் பறித்தனர்.

இதனால் 6 மாதத்தில் ஏழு படங்களை இழந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுஷன்ட் சிங் ராஜ்புட் தன்னுடைய மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அறை என் 305ல் கடவுள் படத்தில் பிரகாஷ்ராஜ் வேடத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா? 12 வருடத்திற்கு பிறகு வெளியான அதிர்ச்சி உண்மை.!

இவருடைய மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சுசாந்த் சிங்கைப் போல தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் இதுபோன்ற பல மன அழுத்தங்களுக்கு ஆளாகி இன்று உச்சத்தை அடைந்து இருப்பதாக பலரும் சமூக வலைதள பக்கங்களில் கூறி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது இளையராஜாவின் சகோதரர்களான வாசுகி பாஸ்கர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவு தமிழ் சினிமாவின் சுஷாந்த் சிங் ராஜ்புட்களே நீங்கள் தல அஜித்தை நினைத்துப் பாருங்கள். அவர் பல்வேறு தடைகளையும் சோதனைகளையும் தாண்டி உச்சம் பெற்று இருப்பவர் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாசுகி பாஸ்கரின் இந்தப்பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

https://twitter.com/AFC_Vedaranyam/status/1274315161659035649?s=19
https://twitter.com/prabakar_raviRT/status/1274309290107432960?s=19
https://twitter.com/M4_Commando_/status/1274318829967929344?s=19