Arai En 305il Kadavul Secret
Arai En 305il Kadavul Secret

அறை என் 305ல் கடவுள் படத்தில் பிரகாஷ்ராஜ் வேடத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது யார் என்பது தெரிய வந்துள்ளது.

Arai En 305il Kadavul Secret : தமிழ் சினிமாவின் சிம்புதேவன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் சந்தானம் கஞ்சா கருப்பு உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அறை எண் 305 ல் கடவுள்.

இப்படம் திரைக்கு வந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இப்படம் குறித்த ஒரு அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது.

அப்போதே 275 நாள் ஓடிய விஜயின் பூவே உனக்காக படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? நீண்டநாள் ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர்.!

கடவுளாக கச்சிதமாக இப்படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து இருப்பார். ஆனால் முதலில் நடிக்க இருப்பது அவரில்லை. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாராம்.

அதன் பின்னர் டிஸ்கஷனில் பிரகாஷ்ராஜின் பெயர் அடிபடவே சிம்பு தேவன் அவரை அணுகியுள்ளார். வில்லன் நடிகர் நான் என்னை போய் எப்படி கடவுளாக ஏற்றுக் கொள்வார்கள் என தயக்கம் காட்டி உள்ளார் பிரகாஷ்ராஜ்.

இல்லை சார் இந்த கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்கு கச்சிதமாக இருக்கும் எனக் கூறி அவரை நடிக்க ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் சிம்புதேவன்.