ரோகிணியை படாத பாடு படுத்தியுள்ளார் விஜயா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அண்ணாமலை அந்த பொண்ணுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்து என்று கேட்க விஜயா மீனா ரோகினிக்கு பிடிச்சதை சமைச்சு கொடு என்று சொல்கிறார். 

அடுத்து முத்து அம்மா சொன்னத அம்மாவே மறந்துட்டு இருக்காங்க விரதம் முடிகிற வரைக்கும் அவங்க கையாலே சமைச்சு சாப்பிடணும் தானே சாமி சொன்னாங்க அப்புறம் தெய்வத்துக்கு ஆகிறதா பரிகாரம் படிக்காமல் போன மலேசியா சம்மந்தி எப்படி வெளிய வருவாரு என்று சொல்ல விஜயா ரோகினியை கிச்சனுக்கு எழுந்து சென்று சாமானை துலக்க வைத்து சமைக்க வைக்கிறார். கூப்பிடப்போன ரோகிணி தடுத்து நிறுத்தி உப்பு போடாம தான சாப்பிடணும்னு சொன்னாங்க என்று சொல்கிறார். 

மறுநாள் காலையில் மீனா கோலம் போட போக விஜயா நீ கோலம் போடாதே என தடுத்து நிறுத்திவிட்டு உள்ளே வர அண்ணாமலை முத்து அங்கு வந்து ஏமா கோலம் போடாமல் நிக்கிற என்று கேட்கின்றனர். அத்தை மாமா கோலம் போட வேணான்னு சொல்லிட்டு உள்ள போயிருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்க ரோகினியை கூட்டி வந்து ரோகிணி தான் விரதம் முடிகிற வரைக்கும் கோலம் போட போறா என்று சொல்கிறார். 

ரோகிணி எனக்கு கோலம் போடத் தெரியாது என்று சொல்லியும் விஜயா விடாமல் உனக்கு வரும் போது என்று சொல்லி டார்ச்சர் செய்ய அண்ணாமலை நீ கோலம் போடாம அவ விட மாட்ட உனக்கு வந்ததை போடு சொல்ல ரோகிணி கோலமாவு வாங்கி கண்டபடி கிறுக்குகிறார். 

அடுத்து மீனா பூரி மசாலா செய்திருக்க எல்லோரும் ரசித்து ரசித்து சாப்பிட மனோஜ் எங்களை கூப்பிடாமலேயே விட்டுட்டீங்க என்று ரோகினியுடன் சாப்பிட உட்காருகிறார். இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த முத்து பூரி மசாலா சூப்பர் என்று சொல்லி சாப்பிட உட்காரும்போது ரோகிணியும் உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஸ்டாப் என எல்லோரையும் நிறுத்துகிறார்.

நீங்க எல்லாரும் சாப்பிடுறீங்க சரி பார்லர் அம்மா தான் விரதம் இருக்கு அது எப்படி சாப்பிடலாம்? ஒருவேளை பத்திய சாப்பாடு சாப்பிடணும்னு தானே சொல்லி இருக்காங்க என்று சொல்ல விஜயா ஆமா நான் கூட மறந்துட்டேன். ரோகிணி எழுந்திடு என்று எழுப்பி விடுகிறார். ரோகிணி முத்துவை முறைக்க பார்லர் அம்மா என்னை எதுக்கு முறைக்கிற அப்புறம் பரிகாரம் நல்லபடியா நடக்காம போச்சுன்னா உங்க அப்பா எப்படி வெளியே வருவாரு என்று சொல்கிறார். 

மனோஜ் சாப்பிட போக புருஷன் பொண்டாட்டி சொல்லுவாங்க பொண்டாட்டி சாப்பிடாம நீ மட்டும் எப்படி சாப்பிடலாம் என்று தடுக்கிறார்.  மீனா விரதம் இருந்தா நான் சாப்பிட மாட்டேன் நான் விரதம் இருந்தா நீ சாப்பிட மாட்டா என்று சொல்கிறார். பார்லர் அம்மா கூட சேர்ந்து நீயும் விரதம் இருந்தால் பரிகாரத்திற்கு நிறைய பவர் கிடைக்கும் என சொல்கிறார். விஜயாவும் மனோஜை சாப்பிட கூடாது என துரத்தி விடுகிறார். 

அதன் பிறகு ஜீவா முத்துவுக்கு போன் போட்டு வெளியே போகணும் என்று கூப்பிட முத்து கிளம்பி செல்கிறார். பிறகு ஜீவா டிராவல் ஏஜென்சிக்கு வந்து டிக்கெட் ரெடியாகிடுச்சா என்று கேட்க அவரும் ரெடியாயிடுச்சு என்று எடுத்துக் கொடுக்கிறார். பிறகு உங்களை பத்தி விசாரிக்க இரண்டு பேர் வந்திருந்தாங்க பேர் கூட மனோஜ்னு சொன்னாங்க என்று சொன்னதும் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் ரோகிணியின் பார்லருக்கு ஜீவா வந்திருக்க அந்த விஷயத்தை மனோஜ்க்கு தெரியப்படுத்த மனோஜ் அங்கு வந்து நின்று அதிர்ச்சி கொடுக்கிறார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.