Vanitha About Kavin Losliya
Vanitha About Kavin Losliya

கவின் லாஸ்லியா பற்றி வனிதா பேட்டி ஒன்றில் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vanitha About Kavin Losliya : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பிக்பாஸ் விட்டு வெளியேறிய பிறகு இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதில்லை பேசிக் கொள்வதில்லை. அவரவர் அவரவரது படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இருப்பினும் இன்னும் அவர்களுக்கு இடையேயான காதல் அப்படியே இருப்பதாக கவிலியா ரசிகர்கள் நம்புகின்றனர். இவர்களைப் பற்றிய விஷயங்களை அடிக்கடி ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கவின் மற்றும் லாஸ்லியா குறித்துப் பேசியுள்ளார்.

அதாவது கவின் சீரியல்ல நடிச்சிருக்கேன், ஒரு படத்துல நடிச்சிருக்கேன் இங்க வந்தா ஓரளவுக்கு புகழ் கிடைக்கும் என்றுதான் வந்தேன் என்ற நினைப்பில் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தான்.

பொதுவா ஆண்கள் டிரஸ், கார் போன்றவற்றின் மீது கவனம் செலுத்துவார்கள். ஆனால் கவின் அப்படியெல்லாம் இல்லாமல் எப்போதும் சிம்பிள் ஆகவே இருப்பான்.

ஆனால் நான் பயன்படுத்தும் செய்தி உள்ளிட்ட மேக்கப் சாதன பொருட்கள் மட்டும் நல்ல தரமானதாக இருக்கும். அந்த அளவிற்கு தன்னுடைய நலனில் அக்கறை கொள்பவர்.

ஆத்தாடி இது என்ன அதிசயம்.. அச்சு அசலாக நயன்தாரா போலவே இருக்கும் இளம்பெண் – ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்கவத்த டிக் டாக் வீடியோ

லாஸ்லியா குறித்துப் பேசியபோது லாஸ்லியா கடுமையான கஷ்டங்களை தாண்டி வந்தவர். அவர் இருக்கும் இடங்களில் பெரிய அளவில் கடைகள் எல்லாம் இருக்காது.

அவர் அணியும் எந்த உடையாக இருந்தாலும் அதனை அவர் அம்மாதான் வைத்திருப்பார். பிக்பாஸ் வீட்டிற்குள் நாளை புடவை கட்ட போகிறார் என்றால் அதை இன்றிரவே அயன் செய்து பின் போட்டு மடிப்புகளை ஏற்படுத்தி தன்னை அழகாக காட்டிக் கொள்வார்.

இல்லையென்றால் சிம்பிளாக இருப்பார் நானே அவரிடம் போய் நல்ல உடை அணிந்து வா எனக் கூறுகிறேன் என பேசியுள்ளார்.

பிக்பாஸ் வினிதாவிற்கு வரும் ஜூன் 27-ம் தேதி மூன்றாவது திருமணம் நடைபெற உள்ளது. தன்னுடைய யூடியூப் சேனலுக்கு உதவி வரும் இயக்குனர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Etched for love

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on