Pushpa 2

வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் படத்தில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Vanangaan and Game Changer Movies Box Office Collection Update
Vanangaan and Game Changer Movies Box Office Collection Update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வணங்கான் என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இயக்குனர் பாலா இயக்கத்திலும்,சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலும் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது இந்த திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து நேற்று சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படமும் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனிவரும் நாட்களில் வசூல்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களில் உங்களுடைய ஃபேவரட் படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Vanangaan and Game Changer Movies Box Office Collection Update
Vanangaan and Game Changer Movies Box Office Collection Update