Unknown Secrets Of Varalaru Movie
Unknown Secrets Of Varalaru Movie

வரலாறு படத்திற்கு ரஜினி பட டைட்டிலை பிரபல தயாரிப்பாளர் நிராகரித்துள்ளார். மேலும் டாப் ஹீரோ ஒருவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

Unknown Secrets Of Varalaru Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி 175 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வரலாறு.

அஜித் மூன்று வேடத்தில் நடிக்க அசின், கனிகா, ரமேஷ் கண்ணா, பொன்னம்பலம் என பலர் இணைந்து நடித்திருந்த இப்படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

ஆம் கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தின் கதையை கமல்ஹாசனை மனதில் வைத்து தான் உருவாக்கியுள்ளார். படத்திற்கு முதலில் காட்பாதர் என்று டைட்டில் வைக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

கேஎஸ் ரவிக்குமார் படையப்பா படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது இது குறித்து ரஜினியிடம் கூற அவர் மதனா என டைட்டில் வையுங்கள் எனக் கூறியுள்ளார். மேலும் கமல் நடிக்க மறுத்தால் நான் நடிக்கிறேன் எனவும் வாக்கு கொடுத்துள்ளார்.

நீயும் அந்த லிஸ்ட சேர்ந்த ஆளு தானே.. அப்படிதான் பேசுவ, வனிதாவையும் வச்சு செய்த மீரா மிதுன் – பரபரப்பைக் கிளப்பிய பதிவுகள்.!!

ஆனால் அப்போதைய சூழ்நிலை தல அஜித்தை இந்த படக்கதைக்குள் கொண்டு வந்து சேர்த்துள்ளது. தல அஜித் ஆரம்பத்தில் படத்தில் கொஞ்சம் தயக்கத்துடனே நடித்துள்ளார்.

ஆனால் வரலாறு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வரலாற்று சாதனை படைக்கும் என தல அஜித்தே எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்களிடையே நல்ல வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் என்ற டைட்டில் தயாரிப்பாளர் நிராகரிக்க அதன் பின்னர் ஏற்கனவே முடிவு செய்திருந்த காட்பாதர் என்ற டைட்டில் வைத்துள்ளனர். மேலும் தமிழில் டைட்டில் வைத்தால் வரிவிலக்கு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்ததை தொடர்ந்தே இந்த படத்தின் டைட்டிலை வரலாறு என மாற்றம் செய்தனர்.