Uchakattam

Uchakattam Movie : டி கிரியேஷன் நிறுவனத்தின் மூலமாக தேவராஜ் தயாரிக்க சுனில் குமார் தேசாயி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் இயக்கியுள்ள திரைப்படம் உச்சகட்டம்.

தாகூர் அனோப் சிங், சாய் தன்ஷிகா, தன்யா ஹோப், ஹர்ஷிகா பூணாச்சா, கிஷோர் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு சன்ஜோய் சவுத்ரி இசையமைத்துள்ளார்.

விஜயுடன் லிப் லாக்… கேவலமா இல்லயா? நடிகையை விளாசும் நெட்டிசன்கள்.! ( வீடியோ உள்ளே )

முழுக்க முழுக்க திரில்லரான கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 22-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

பொதுவாகவே திரில்லர் கதைகளை இயக்குவதில் வல்லமை கொண்ட சுனில் குமார் தேசாயி இந்த படத்தை கொலை, காதல், காமம் என அனைத்தும் கலந்து திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

தமிழில் “உச்சகட்டம்” என்றும், “உத்கர்ஷா” என மற்ற மூன்று மொழிகளிலும் பெயரிப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.