Tughlaq Darbar First Look
Tughlaq Darbar First Look

விஜய்சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tughlaq Darbar First Look : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவின் கிடுகிடுவென வளர்ந்த நடிகர்களில் இவரும் ஒருவர்.

ஒவ்வொரு வருடமும் டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன.

மேலும் தளபதி விஜய்க்கு வில்லனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் முடிவடைந்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் மாஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் கால கொடுமை.. 40 வயதில் சேரன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோக்கள்.!

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை எட்டாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியுடன் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், காயத்ரி, பார்த்திபன் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். லலித் குமார் இன் செவன் க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கோவிந்தா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.