TTV Dinakaran open talk
TTV Dinakaran open talk
பெங்களூர் புகழேந்தி விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

TTV Dinakaran reaction on pugalenthi issue – அதிமுக இரண்டாக உடைந்த போது சசிகலாவின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி டிடிவி தினகரன் பக்கம் நின்றார்.

தற்போது வரை அந்த கட்சிக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். பெங்களூரில் தங்கி இருக்கும் அவர் சசிகலாவை யார் சந்திக்க விரும்பினாலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறார்.

pugalendhi

சமீபத்தில், அமமுகவையும், தினகரனையும் அவர் விமர்சிக்கும் வீடியோ ஒன்று வெளியானது. அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகளிடம் பேசு அவர் ‘பொறுமையாக இருங்கள்.

போகும் இடத்தில் நமக்கு மரியாதை இருக்கனும். நமக்கான எதிர்காலத்தை உருவாக்கிவிட்டுதான் அங்க போகனும். 14 வருடம் வெளியில் இருந்த தினகரன் ஊருக்கு காமிச்சது இந்த புகழேந்திதான்.

யோசனை செய்து ஒரு முடிவுக்கு வருவோம். நான் போகும் போது உங்களையும் அழைத்து செல்கிறேன்’ என அவர் பேசும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

கட்சி ஆரம்பிக்க சொன்னேன்.. அஜித் இப்படி சொல்லிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்.!

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன் ‘அந்த வீடியோவை நானும் பார்த்தேன். இதை அமமுக நிர்வாகிகள் வெளியிட்டதாக தெரியவில்லை.

இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தப்படும். அமமுகவில் இருந்து தொண்டர்கள், நிர்வாகிகள் வெளியேறுவது அவர்களின் சொந்த விருப்பம்.

நமது நோக்கம் அம்மாவின் தலைமையின் இயக்கத்தையும், சின்னத்தையும் மீட்டெடுப்பது மட்டுமே’ என அவர் தெரிவித்தார்.