இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்..!

Web Ads

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

Top 10 blockbuster movies released this year
Top 10 blockbuster movies released this year

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு வெளியாகி.மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூல் வேட்டையாடிய 10 திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதில் முதலிடத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 180 கோடி வசூல் செய்துள்ளது.

இரண்டாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் 151 கோடி வசூல் செய்துள்ளது.

மூன்றாவதாக விடா முயற்சி திரைப்படம் 88 கோடி முதல் 90 கோடி வரை வசூல் செய்துள்ளது.

நான்காவது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் 83 கோடி வசூல் செய்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் 65 கோடி வசூல் செய்துள்ளது.

சசிகுமார் சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி 60 கோடி வசூல் செய்து ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் 54 கோடி வசூல் செய்து ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

விஜய் சேது விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா திரைப்படம் 54 கோடி வசூல் செய்துள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ 52 கோடியும் பத்தாவது இடத்தில் சூரி நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் 45 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Top 10 blockbuster movies released this year
Top 10 blockbuster movies released this year