Theatres Owner Council Decision : Kamal haasan | Vishal | Karthi | Kollywood | | Tamilcinema | Latest Cinema News | Event Video | kalakkalCinema

Theatres Owner Council Decision :

தியேட்டர் உரிமையாளர் சங்கம் புதிய கட்டுப்பாடுகளுடன் வெளியிட்டுள்ள லிஸ்டில் கமல், விஷால், கார்த்தி போன்றவர்களின் பெயர்கள் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தியேட்டர்களில் வரும் வசூலில் விநியோகிஸ்தர்களுக்கும் ஒரு பங்கு செல்லும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த முறையில் தற்போது திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அஜித், விஜய், ரஜினி படங்கள் என்றால் முதல் வார வசூலில் A சென்டரில் 60% மற்றும் மற்ற இடங்களில் 65 % பங்கும் அளிக்கப்படும்.

இவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார் – காஜல் அகர்வால் ஓபன் டாக்.!

மேலும் சூர்யா, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரா வசூலில் A சென்டரில் 55% மற்ற இடங்களில் 60% பங்கும் அளிக்கப்படும் என கூறியுள்ளனர்.

அஜித் தான் ஹாட், ஆனால் விஜய்? – தமன்னா ஓபன் டாக்.!

மற்ற நடிகர்களின் படங்களுக்கு எல்லா இடங்களிலும் 50% பங்கு அளிக்கப்படும். அதே போல் இரண்டாம் வார வசூலில் அஜித், விஜய், ரஜினி படங்களுக்கு A செனடரில் 55 % மற்ற இடங்களில் 60% பங்கு அளிக்கப்படும்.

சூர்யா, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களின் படங்களுக்கு A சென்டரில் 50 % பங்கும் மற்ற இடங்களில் 55 % பங்கும் அளிக்கப்படும் என கூறியுள்ளனர்.

இந்த லிஸ்டில் கமல், விஷால், கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் இடம் பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சம்மந்தப்பட்ட நடிகர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.