தளபதி 69 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!!

Web Ads

தளபதி 69 படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

thalapathy 69 movie title update

thalapathy 69 movie title update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் பேட்டை நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் தளபதி 69 என்ற படத்தில் நடித்த வருகிறார்.இது தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மமீதா பைஜூ, டிஜே என பல்வேறு பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் டைட்டில் நாளைய தீர்ப்பு என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இது மட்டும் இல்லாமல் குடியரசு தினத்தன்று இந்த படத்தின் அப்டேட் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

thalapathy 69 movie title update

thalapathy 69 movie title update