
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது?: கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..
வரலாற்றில் கி.மு, கி.பி. எப்படி முக்கியமாக பார்க்கப்படுகிறதோ, அதுபோல தி.மு, தி.பி. பார்க்கப்படுகிறது. அவ்வகையில், கீர்த்தியின் வாய்மொழி பார்ப்போம்..
நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், தொழில் அதிபர் ஆண்டனி தட்டிலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமதியான பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என பேசியிருக்கிறார்.
‘திருமணத்திற்கு பிறகு எதுவும் மாறியது போன்று தெரியவில்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. அது எனக்கு பழகிவிட்டது. ஆனால், ஆண்டனிக்கு பழக்கம் இல்லை. அதனால், அவருக்கு சங்கடமாக இருக்கிறது. இருந்தாலும் அவர் எந்த புகாரும் சொல்வது இல்லை. எனக்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறார்.
ஆண்டனி தட்டில் தன் இன்ஸ்டாகிராம் கணக்கை பிரைவேட்டாக வைத்திருக்கிறார். அவருக்கு தன் புகைப்படங்களை வெளியிடுவதில் விருப்பமில்லை. இருந்தாலும், எனக்காக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார். மீடியா முன்பு வர கூச்சப்பட்டாலும், எனது கெரியருக்கு இது முக்கியம் என்பதை புரிந்துகொண்டு நடக்கிறார்.
பல வருடக் காதலில், திருமணத்திற்கு முன்பே முறைப்படி வாழத் தொடங்கி விட்டோம். அதனால், எதுவும் மாற்றமாக தெரியவில்லை’ என்கிறார் கீர்த்தி.
