
திருமண அப்டேட் கொடுத்த பிக் பாஸ் அருண், என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!
திருமணம் குறித்து பிக் பாஸ் அருண் பேசியுள்ளார்.

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி எட்டாவது சீசன் கடந்த வாரம் முடிந்து முத்துக்குமரன் டைட்டிலை வென்று இருந்தார். சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அருண், இவரும் அர்ச்சனாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால் இருவருமே இது குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் கொடுக்காமல் இருந்தனர் பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரன்ட்ஸ் அண்ட் ஃபேமிலி சுற்றில் அருனுக்காக அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார். அப்போது அருண் போட்டியாளர்கள் முன்னிலையில் தனது காதலை அழகாக வெளிப்படுத்தி இருந்தார்.
விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பிக் பாஸ் வீட்டில் சொல்லி இருந்தார் அதேபோல் தற்போது அது குறித்து பேசி உள்ளார். அதில் எங்கள் இரு வீட்டிலும் திருமணம் விரைவில் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த வருடத்திற்குள் எங்களது திருமணத்தை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் அர்ச்சனா கடந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக சென்று டைட்டிலை வென்றது குறிப்பிடத்தக்கது.
