Pushpa 2

‘தளபதி-69’ படத்தை இயக்கும் எச்.வினோத்திற்கு, ரசிகர்கள் கோரிக்கை: நிறைவேறுமா?

தளபதி விஜய்யின் கடைசிப் படமான ‘தளபதி-69’ பட இயக்குனர் எச்.வினோத்திற்கு, பேரார்வத்துடன் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது என்ன என காண்போம்..

விஜய், தவெக கட்சி ஆரம்பித்து, விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் காட்டி, முழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, தனது கடைசிப் படமான ‘தளபதி-69’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

அவ்வகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘தளபதி-69’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

அரசியல் சார்ந்த படமாக உருவாகும் ‘தளபதி-69’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

மேலும், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் திடீரென இயக்குனர் எச்.வினோத்திற்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். ‘தளபதி-69′ விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால், விஜய்யின் திரைப்பயணத்தை தொகுத்து, ஒரு சில நிமிட வீடியோவாக படம் முடிந்த பிறகு போட்டால் நன்றாக இருக்கும்’ என ரசிகர்கள் ஒரு கோரிக்கையாக, இயக்குனர் எச்.வினோத்திற்கு வைத்துள்ளனர்.

தளபதி ரசிகர்களின் விருப்பத்தை எச்.வினோத் நிறைவேற்றுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.!

thalapathy-69 movie director h.vinoth and vijay fans
thalapathy-69 movie director h.vinoth and vijay fans