Thalapathy 63
Thalapathy 63

Thalapathy 63 Latest Updates :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தளபதி 63 – வழக்கம்போல அதே சர்ச்சையில் சிக்கிய அட்லி!

இப்படத்தின் கதை வட சென்னையில் நடப்பதால் பெரும்பாலான காட்சிகளை ரியல் லொக்கேஷனில் எடுக்கவே படக்குழு விரும்பினர்.

ஆனால் தினமும் விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் திரள்வதால் தற்போது பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்தமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

இறுதி கட்டத்தில் விஜய் ஆன்டனியின் “ தமிழரசன் “

எனவே வட சென்னை போன்ற அரங்கத்தை திரைப்பட நகரில் உருவாக்கி அதில் படப்பிடிப்பு நடத்த படக்குழு தற்போது திட்டமிட்டுள்ளது.

மேலும் தீபாவளியில் திரைக்கு வருவதால் ஜூலையிலேயே இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.