Thalapathy 63 Atlee

Thalapathy 63 Atlee : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு விஜய் – அட்லி கூட்டணி இணைந்த இரண்டு படங்களும் மெகா ஹிட். இருந்தாலும் அந்த படங்களில் சொன்னதை விட அட்லி அதிகமாக பட்ஜெட்டை இழுத்தார் என்ற விவகாரம் பின்னர் விஸ்வரூபம் எடுத்தது.

விஜய் மனசு யாருக்கு வரும்? தளபதி 63 குறித்து வெளியான அதிரடி தகவல்.!

அதேபோல்தான் தற்போது இந்த படத்திற்கும் சொன்னதை விட கூடுதலாக பட்ஜெட் எகிறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஸ்போர்ட்ஸ் படம் என்பதால் செட்டிற்காகவே அதிக பணம் செலவு செய்யப்படுவதாகவும் இதனால் அட்லி மீது தயாரிப்பு தரப்பு அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.