Thalapathy 63 is Remake of Chak de india | Thalapathy Vijay | Nayanthara | Kathir | Yogi Babu | Kollywood | TamilCinema | Shah Rukh Khan

Thalapathy 63 is Remake of Chak de india :

இந்தி சக் தே இந்தியா படத்தின் உரிமத்தை வாங்கிதான் இப்படத்தை எடுத்து வருகிறார்கள்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

ஆதித்ய வர்மாவை உண்மையில் இயக்கியது யார்? வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஈ.சி.ஆரில் இருந்தே உள்ளே வந்து தற்போது சிட்டிக்குள் நடைபெற்று வருகிறதாம்.

மேலும் சில கல்லூரிகளிலும் இப்படத்தின் மாண்டேஜ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இப்படத்தின் கதை குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் இது இந்தியில் வெளியான சக் தே இந்தியா பாணியில் இருப்பதாக கூறினர். அது உண்மைதானாம்.

இந்தி சக் தே இந்தியா படத்தின் உரிமத்தை வாங்கிதான் இப்படத்தை எடுத்து வருகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.