Vikram Directed Aditya Varma : The film is planned to release the film in July | Dhruv Vikram | Kollywood | Tamil Cinema | Varma

Vikram Directed Aditya Varma :

ஆதித்ய வர்மாவின் மொத்த வேலையையும் செய்தது விக்ரம் தானாம். அவரே படப்பிடிப்பில் கலந்துகொண்டு படத்தை மறைமுகமாக இயக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஏற்கனவே பாலா இயக்கத்தில் எடுத்த வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறிமுக இயக்குனர் கிரி சையா இயக்கத்தில் புது படத்தை இயக்கி வருகின்றனர்.

சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்? வைரலாகும் செய்தி!

ஆனால் பெயருக்குதான் அவர் இயக்குநராம். மொத்த வேலையையும் செய்தது விக்ரம் தானாம். அவரே படப்பிடிப்பில் கலந்துகொண்டு படத்தை மறைமுகமாக இயக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை குறுகிய கால படமாக முடித்து வெளியிடுவதாக படக்குழு சொல்லி இருந்தனர். தற்போது அதை பின்பற்றி முழு படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

கூடிய விரைவில் பின் தயாரிப்பு வேலைகளை முடித்து ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இதில் நாயகியாக பனிதா சந்து நடிக்க பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவி கே. சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.