Thalapathy 63
Thalapathy 63

Thalapathy 63 அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!

அதேபோல் இப்படத்தின் கதை குறித்தும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Atlee

இதன் கதை ஹாலிவுட் படத்தின் காப்பி என்றும் உதவி இயக்குனர் ஒருவரின் கதை என்றும் ஏற்கனவே பல்வேறு செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதையை சிவா என்றொரு குறும்பட இயக்குனர் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி தான் எடுத்த குறும்படத்தை திருடி இயக்குனர் அட்லி ரெடி பண்ணியிருப்பதாக புகார் கூறி வருகிறார்.

அதோடு சர்கார் பாணியில் இந்த கதை திருட்டு விவகாரத்தை தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் நீதிமன்றத்துக்கும் அவர் கொண்டு சென்றிருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

பொதுவாக விஜய் படங்கள் ரிலீஸ் சமயத்தில் சர்ச்சையில் சிக்கும். ஆனால் இப்படம் தற்போதே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here