Thalapathy 63 Updates :
Thalapathy 63 Updates :

Thalapathy 63 Updates : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தளபதி 63 படப்பிடிப்பில் திடீர் மாற்றம் – ஏன் தெரியுமா?

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும்.

இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்யின் கெட்டப் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது இன்று நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய், ஒரு ash கலர் pant மற்றும் waist overcoat உடன் கூடிய ஃபார்மல் ஷூட் அணிந்திருந்ததாகவும் இதுவே இப்படத்தில் இவரது கெட்டப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

. மேலும் அடுத்த 50 நாட்கள் வரை இங்குதான் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.