Thala Vs Thalapathy Twitter Trends
Thala Vs Thalapathy Twitter Trends

டுவிட்டர் ட்ரெண்டிங்கில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

Thala Vs Thalapathy Twitter Trends : தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்கள்.

நேற்று தளபதி விஜயின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இதற்காக மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் போஸ்டர் எல்லாம் ஒட்டி அமர்க்களப்படுத்தி இருந்தனர்.

அதிலும் போனவாரம் தெறி போட்டீங்க இந்த வாரம் பிகில் போடுறீங்க ரொம்ப சந்தோஷம். அடுத்த வாரம் மாற்றம் வேற நடிகரோட படத்தை போடுங்க எல்லாரும் நல்லா இருக்குன்னு தளபதி சொல்லி இருக்காரு என போஸ்டர் அடித்து ஒட்டி அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றியனார்கள்.

உங்களுக்கு ஜோடியா நடிக்கணும்.. மாளவிகா மோகனன் ஆசைக்கு தனுஷ் கொடுத்த பதில் – எதிர்பார்ப்பை என்கிற வைத்த பதிவு

மேலும் இப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கியதும் #BigilCrackerOnSunTV என்ற டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி தொடங்கினர். இந்த டேக் இதுவரை 947K-க்கும் அதிகமான ட்வீட்களை பெற்று உள்ளது.

அதேபோல் இவர்களுக்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் #28YrsOfSELFMADETHALAAjith என்ற டேக்கை பயன்படுத்த ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை இந்த டேக்கில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் பதிவாகியுள்ளன.

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.