Dhanush Reply to Malavika Mohanan
Dhanush Reply to Malavika Mohanan

உங்களுக்கு ஜோடியா நடிக்கணும் என மாளவிகா மோகனன் தன்னுடைய ஆசையைக் கூறி தனுஷுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Dhanush Reply to Malavika Mohanan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்ட இவர் கடந்த ஜூலை 28 ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார்.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தனுஷின் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வந்தனர். தனக்கு வாழ்த்து கூறிய அத்தனை படங்களுக்கும் ட்விட்டர் பக்கத்தின் மூலமாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்து இருந்தார் என்றார் தனுஷ்.

கரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக தன்னுடைய பெயரையே மாற்றிய ஜீவா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

அந்த வகையில் ரஜினிகாந்துடன் பேட்ட மற்றும் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ் சார் இந்த வருடம் சிறப்பான வருடமாக அமையட்டும். உங்களுடன் சேர்ந்து நடிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் யாராச்சும் அதுக்கேத்த மாதிரி கதை ரெடி பண்ணுங்க என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன் இந்த பதிவை பார்த்த தனுஷ் அவருக்கு நன்றி தெரிவித்து மட்டுமல்லாமல் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதனால் தனுஷின் அடுத்த படங்களில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்களின் இந்த உரையாடலைப் பார்த்த ரசிகர்களும் விரைவில் இந்த கூட்டணி அமைய வேண்டும் என தங்களது ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.