Thala Ajith Bike Ride to Chennai
Thala Ajith Bike Ride to Chennai

ஹைதராபாத்திலிருந்து பைக்கிலேயே சென்னை வந்து சேர்ந்துள்ளார் தல அஜித்.

Thala Ajith Bike Ride to Chennai : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் தொடங்கின. அதன் பின்னர் சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து படத்தின் பைக் சேசிங் சீன் ஒன்று ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

விக்ரமையும் விட்டு வைக்காத தமிழ் படம் 2, படத்தில் இருந்து தூக்கப்பட்ட கெட்டப்பை வெளியிட்ட பிரபல நடிகர்.!

இந்த காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததைத் தொடர்ந்து அஜித் பைக்கிலேயே சென்னை செல்வதாக கூறியுள்ளார். இதனால் பதறிப்போன படக்குழு பணம் வைத்திருக்கிறீர்கள் என கேட்க அதெல்லம் பெட்ரோல் போடும் அளவிற்கு இருக்கிறது எனக் கூறி அங்கிருந்து பைக்கில் கிளம்பியுள்ளார்.

அஜித் பைக்கில் செல்வதால் படக்குழு அங்கிருந்து அனைத்தையும் செய்து கொண்டு உடனே கிளம்பி அஜித்தை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகி விட்ட நிலையில் தற்போது தான் வெளியில் தெரிய வந்துள்ளது.

Thala Ajith Bike Ride to Chennai
Thala Ajith Bike Ride to Chennai