Tamil Nadu Vs Maharashtra
Tamil Nadu Vs Maharashtra

மகாராஷ்டிராவில் விட தமிழகத்தில் பாதிப்பும் இறப்பும் குறைவாகவே இருப்பதற்கான காரணத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Vs Maharashtra : தமிழ்நாட்டில் கோவிட் -19 இறப்பு விகிதம் மகாராஷ்டிராவை விட குறைவாக உள்ளது, ஏனெனில் அரசு அதிக மக்களை பரிசோதித்து நோயாளிகளுக்கு நன்கு சிகிச்சை அளித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்தார்.

மாநிலத்தில் 1.56 லட்சம் பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 67% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவிட் -19 வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் 2,250 பலியாகியுள்ளனர், மகாராஷ்டிராவில் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

தளபதி 65 இயக்குனர் யார்னு தெரிஞ்சு போச்சு.. தெறிக்க விட்டு கொண்டாடும் தளபதியன்ஸ்.!

“தமிழக அரசின் திறமையான சுகாதார பராமரிப்பு காரணமாகமே இறப்பு விகிதம் குறைவாக உள்ளது” என்று முதல்வர் கூறினார்.

ஈரோடில் எம்.எஸ்.எம்.இ பிரதிநிதிகளுடன் ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முதல்வர், அரசு நிதிச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். “இருப்பினும், தமிழக அரசு தொழில்கள் தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக பரிசீலித்து வருகிறது” என்று கூறினார், அரசாங்கம் விவசாயம் மற்றும் ஜவுளித் துறைகளில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் 8,329 எம்.எஸ்.எம்.இ.களுக்கு ரூ .350 கோடி கடன்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கடன் தொகை லாக் டவுனால் பாதிக்கப்பட்ட தங்கள் தொழில்களை மீட்டெடுக்க உதவும் என்று பேசினார்.