முன்னணி நடிகையாக இருந்த தமன்னாவின் காதலும் தற்போதைய சினிமா கேரியரும்
முன்னணி நடிகையாக இருந்த தமன்னா, தற்போது மீண்டும் பழைய பார்முக்கு வர தாராள கவர்ச்சியில் இறங்கியுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் காண்போம்..
தமன்னா ‘லஸ்ட் ஸ்டோரிஸ்-2’ படத்தில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் பிரிந்துவிட்டார்கள்.
பின்னர், ஜெயிலர் படத்தில் ‘காவாலா’ என்ற பாடலில் ஆடியதன் மூலம் ட்ரெண்டிங் ஆனார். கடைசியாக அவர் தமிழில் நடித்த ‘அரண்மனை 4’ ரிசல்ட்டும் பாசிட்டிவ்வாகவே இருந்தது. ஆயினும், தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால், ஹிந்திக்கு சென்றுள்ள தமன்னா பாடல்களில் உச்சபட்ச கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்தார்.
இதற்கிடையே தெலுங்கில் ‘ஒடேலா 2’ படத்தில் நடித்திருந்தார். படத்தின் ட்ரெய்லர் வந்தபோதே, வசனங்களை வைத்து ரசிகர்கள் தொடர்ந்து கலாய்த்தார்கள். படமும் ரிலீஸாகி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ‘வ்வான்’ என்ற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்திருக்கிறார். இப்படம் ஹாரர் ஜானரில் உருவாகிறது.
அருணாப் குமார் மற்றும் தீபக்குமார் மிஸ்ரா ஆகியோர் இணைந்திருக்கும் இப்படம் அடுத்த வருடம் மே 15-ந்தேதி ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.