என் காதலி யார் என்பதை அறிவிக்கிறேன்: காதல் திருமணம் குறித்து விஷால்

‘சில மாதங்களாக காதல் கதை ஓடிக்கொண்டிருக்கிறது’ என தெரிவித்துள்ளார் விஷால். இது பற்றிய தகவல்கள் காண்போம்..

நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுமான வேலைகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழா நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஷால் தனக்கு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறியிருக்கிறார். நடிகர் சங்கக் கட்டிடம் கட்டும் பணிகள் முடிந்து செப்டம்பரில் திருமணம் நடைபெறும். இது குறித்த அறிவிப்பு விஷாலின் பிறந்த நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இது குறித்து விஷால் தெரிவிக்கையில், வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 29-ந்தேதி எனது பிறந்த நாள் என்பதால் அந்த நாளில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்.

என்னுடைய திருமணம் காதல் திருமணமாக இருக்கும். சில மாதங்களாக காதல் கதை ஓடிக் கொண்டிருக்கிறது. என்னுடைய காதலி யார் என்பது குறித்து நான் சில மாதங்களில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு நான் சினிமாவிற்கு வந்தேன். ‘செல்லமே’ படத்தில் நடிகராக அறிமுகமானேன். இப்போது 21 வருடங்கள் கடந்து விட்டது. மக்கள் தான் என்னுடைய சொத்து. அவர்கள் இல்லை என்றால், நான் இன்று நடிகராக இருந்திருக்க முடியாது’ என கூறியுள்ளார்.