ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!
ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர், ஸ்டன்ட் மாஸ்டர் என இரண்டிலும் பணியாற்றி வந்தவர் கோதண்டராமன். முன்னணி நடிகர்களின் படமான பகவதி, திருப்பதி, கிரீடம், வேதாளம் போன்ற படங்களில் துணை சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் சுந்தர். சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படம் இவருக்கு புதிய அடையாளத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்.
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கோதண்டராமன் தற்போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.