Sri Gopika in BigG Boss 3 :

90 எம்.எல் படத்தில் நடித்த நாயகிகளில் ஒருவரான ஸ்ரீ கோபிகாவும் தற்போது இன்னொரு போட்டியாளராக இணைந்துள்ளாராம்.

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஒரேநாளில் ஒன்றாக களமிறங்கும் ஜோதிகா, நயன்தாரா – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்!

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதில் முதல் போட்டியாளராக நடிகை சாந்தினியும் இரண்டாவதாக ஜாங்கிரி மதுமிதாவும் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் போக 90 எம்.எல் படத்தில் நடித்த நாயகிகளில் ஒருவரான ஸ்ரீ கோபிகாவும் தற்போது இன்னொரு போட்டியாளராக இணைந்துள்ளாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.