Web Ads

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மீண்டும் ஸ்ரீலீலா..

‘பராசக்தி’ படத்திற்கு பிறகு, எஸ்கே நடிக்கவிருக்கும் படத்தின் தகவல்கள் பார்ப்போம்..

சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 14-ந்தேதி இப்படம் வெளியாகவுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக வருகிறார். மேலும் அதர்வா, பாசில் ஜோசப் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

’பராசக்தி’ படத்தை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இப்படத்திலும் நாயகியாக நடிக்க ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரியவுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரிக்கவுள்ளது.

‘டான்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர். இதன் படப்பூஜையில் இப்படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் என்பதை படக்குழு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sreeleela and sivakarthikeyan parasakthi film images 1200
sreeleela and sivakarthikeyan parasakthi film images 1200