Special Emoji for NGK in Twitter : Suriya | Sai pallavi | Rakul Preet | Yuvan Shanakr Raja | Selvaraghavan | Kollywood | TamilCinema

Special Emoji for NGK in Twitter :

டிவிட்டரில் என்.ஜி.கே என்று ஆங்கிலத்தில் ஹேஷ் டாக் மூலம் டைப் செய்தால் சூர்யாவின் எமோஜி முகம் தோன்றுமாம்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி; வைரலாகும் புகைப்படம் உள்ளே!

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைதொடர்ந்து தற்போது இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.

இது ஒருபக்கம் இருக்க டிவிட்டரில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக என்.ஜி.கே என்று ஆங்கிலத்தில் ஹேஷ் டாக் மூலம் டைப் செய்தால் சூர்யாவின் எமோஜி முகம் தோன்றுமாம்.

ஏற்கனவே மெர்சல், காலா படங்களுக்கு இந்த விளம்பர யுக்தி கையாண்ட நிலையில் தற்போது அதில் இந்த படமும் இணைந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.