Atlee not working in Avatar 2 : Atlee was later revealed to be an informer in Wikipedia that Avadar 2 will work in the film. | Thalapathy 63 | Vijay | Hollywood

Atlee not working in Avatar 2 :

அட்லி அடுத்ததாக அவதார் 2 படத்தில் வேலை செய்யவிருப்பதாக விக்கிபீடியாவில் ஒரு தகவல் வெளியாகி வைரலானது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

எஸ்.ஜே.சூர்யாவுடன் சண்டைபோட்ட அமிதாப் பச்சன்; பாதியில் நின்றதா உயர்ந்த மனிதன்?

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தொடர்ந்து மூன்று விஜய் படங்களை இயக்கிவிட்ட அட்லி இந்த படத்தை தொடர்ந்து யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் அட்லி அடுத்ததாக அவதார் 2 படத்தில் வேலை செய்யவிருப்பதாக விக்கிபீடியாவில் ஒரு தகவல் வெளியாகி வைரலானது.

ஆனால் இதை யாரோ ஒரு ரசிகர்தான் விளையாட்டாக செய்துள்ளார். மேலும் அட்லி அடுத்ததாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களைதான் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.