கடைசி வரைக்கும் கதையை சொல்லுங்க என்று முடிந்து போன சீரியலை கலாய்த்துள்ளார் ரேஷ்மா.
Reshma About Sita Ramam Serial Wrapped : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சீதா ராமன். இந்த சீரியலில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா.
கதைப்படி தனக்கு பிடிக்காத மருமகளாக இருக்கும் சீதாவை எப்படியாவது வெளியே துரத்த வேண்டும் என்ற தொடர்ந்து ஸ்கெட்ச் போட்டு போராடி வந்தார் மகாலட்சுமி. இந்த நிலையில் இந்த வாரத்துடன் சீதாராமன் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.
சூட்டிங் போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் ரேஷ்மா கடைசி வரைக்கும் கதையை சொல்லல என்று கலாய்த்து உள்ளார். மேலும் சீரியலை பார்ப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.