விமலுக்கு மாமாவாகி உள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியும் இனியாவும் ஷாப்பிங் முடித்துவிட்டு ரெஸ்டாரண்ட வந்திருக்க இனியா கேக் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உனக்கு என்ன புடிக்குமாடா என்று கோபி கேட்க ஏன் டாடி இப்படி கேக்குறீங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறார். அதன் பிறகு இனியா நீங்கள் குழந்தை பெத்துக்க போறீங்களா டாடி என்று கேட்க கோபி ஷாக் ஆகிறார்.

ஏண்டா இப்படி கேக்குற என்று கோபி கேட்க இல்ல கார்ல வரும்போது குழந்தையை பற்றி பேசனீங்களே அதனால் கேட்கிறேன் என்று சொல்கிறார். அது சும்மா கேட்டேன் என்று சொல்லும் கோபி ஒருவேளை உனக்கு தம்பி பாப்பா தங்கச்சி பாப்பா வந்தா எப்படி பீல் பண்ணுவ என்று கேட்க கோபி அதெல்லாம் நடக்காது நீங்க எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று கேட்கிறார்.

அதைத் தொடர்ந்து கோபி ஒரு போன் கால் பேச வெளியே சென்ற நேரத்தில் திடீரென அங்கு வரும் விமல் இனியாவை பார்த்து அவரிடம் பேசிக் கொண்டிருக்க நீங்க பழனிச்சாமியோட சொந்தக்காரர் என்பது என் அப்பாவுக்கு தெரிய வேண்டாம் என்று இனியா சொல்கிறார். நான் எதையும் சொல்ல மாட்டேன் என்று விமல் சொல்லிக் கொண்டிருக்க கோபி அங்கு வந்து விட யார்ரா நீ ஒரு பொண்ணு தனியா உக்காந்துட்டு இருக்க கூடாது என்று விமலின் சட்டையை பிடிக்கிறார்.

இனியா டாடி டாடி என்று சொல்ல விமலும் டாடி கைய எடுங்க நான் இனியாவோட பிரண்டு தான் என்று சொல்கிறார். டாடியா யாருக்கு யாரு டாடி என்று கோபி கடுப்பாக விமல் அப்பா என்று சொல்லி கூப்பிட திரும்பவும் கடுப்பாகிறார். நீ சொன்னியே காலேஜ்ல பத்து வயசு வித்தியாசத்தில் ஒரு தம்பி இருக்கான்னு அது இவன் தானா என்று கோபி கோவப்பட இனியா அது இவர் இல்ல என்று சொல்கிறார். பிறகு விமல் மாமா என்று கூப்பிடுகிறார்.

கோபி முதல்ல டாடி அப்பான்னு சொன்ன இப்போ மாமாவா என்று கோபப்பட எங்க ஊர்ல எல்லாம் அங்கிள்னு கூப்பிட மாட்டோம் மாமான்னு தான் சொல்லுவோம் என்று சொல்கிறார். எந்த ஊர் காரன் டா நீ என்று விசாரிக்க விமல் கோயம்புத்தூர் காரன் என்று சொல்ல அங்க இல்லாத காலேஜா இங்கே இருக்கு என்று கேள்வி கேட்கிறார். இனிமே உன்ன பாக்கவே கூடாது போடா என்று துரத்திவிட்டு அவனிடம் பேசாத என்று இனியாவுக்கு அட்வைஸ் சொல்கிறார்‌‌.

அடுத்ததாக வீட்டில் எழில் குழந்தைக்கு பெயர் வைக்க வீட்டை டெக்கரேட் செய்வதற்காக எல்லா பொருட்களையும் வாங்கி வருகிறார். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பலூனை கட்டி டெக்கரேட் செய்ய குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று பேச்சு வருகிறது. இனியா சில பேர்களை சொல்ல செழியன் ராகினி என்ற பெயரை சொல்ல ஈஸ்வரி குழந்தைக்கு நான் தான் பெயர் வைப்பேன். எல்லாருக்கும் பிடித்த மாதிரி நல்ல தமிழ் பெயராக தான் வைப்பேன் என்று சொல்கிறார்.

இதையடுத்து ரூமுக்குள் வந்த ஜெனி நீ ராகினினு சொன்னியே ஏன் என்று கேட்க செழியன் ராமமூர்த்தி என்ற பெயரில் இருந்து ராவை எடுத்துக்கிட்டேன் என்று சொல்ல அப்ப மாலினி என்ற பெயரில் இருந்து னி-யை எடுத்துக்கிட்டியா என்று அதிர்ச்சி கொடுக்கிறார். ராகினி மாலினி இரண்டும் ஒரே மாதிரி இருக்குல்ல என்று சொல்ல செழியன் சத்தியமா நான் அப்படி யோசிக்கல என்று பதறுகிறார்.

மறுபக்கம் அமிர்தா எனக்கும் குழந்தை பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு என்று சொல்ல எழில் கண்டிப்பா பெத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு நாள் வரும் என்று சொல்ல அமிர்தா எப்போது என்று கேட்கிறார். அதுல சில சிக்கல் எல்லாம் இருக்கு என்று எழில் சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.