Soundarya Rajinikanth

Soundarya Rajinikanth : திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு தன்னுடைய மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

வைரலாகும் விஷாலின் வருங்கால மனைவி புகைப்படம் – திருமணம் எங்க தெரியுமா?

இதனையடுத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்ற தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

அதற்காக ஏற்பாடுகளும் தற்போது தடபுடலாக நடந்து வருகின்றன. விசாகன் வஞ்சகர் உலகம் என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை இயக்கி வருகிறார்.

விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் தான் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.

சௌந்தர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்யும் விசாகனின் சொத்து மதிப்பு – மிரள வைக்கும் தகவல்.!

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் வரும் பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவர்களது திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.