Soundarya & Visagan

Soundarya & Visagan :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம் செய்ய உள்ள விசாகனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் ரஜினியை வைத்து கோச்சடையான், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி-2 ஆகிய படங்களை இயக்கி இருந்தார்.

திருமணமாகி விவாகரத்து பெற்ற சௌந்தர்யா தற்போது பிரபல தொழிலதிபரான வணங்காமுடியின் மகனான விசாகனை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

MBA பட்டதாரியான விசாகன் வஞ்சகர் உலகம் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மூடர் கூட்டம் நவீன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது இவர்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் விசாகன் மற்றும் வணங்காமுடிவுக்கு சொந்தமான Apex நிறுவனம் இந்தியாவில் உள்ள முன்னணி மருத்துவ நிறுவனங்களில் ஒன்று.

இதன் ஒரு வருடத்தின் வருவாயே ரூ 500 கோடியாம். அதுமட்டுமில்லாமல் இவர்களின் இதர சொத்து மதிப்பு எப்படியும் ரூ 1000 கோடிக்கு அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விசியம் என்னவென்றால் சௌந்தர்யாவை போல விசாகணும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.