Soorarai Pottru Business Report
Soorarai Pottru Business Report

ரிலீஸுக்கு முன்னாடி சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் லாபத்தை அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Soorarai Pottru Business Report : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று.

உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் தற்போதைய சூழ்நிலை காரணமாக அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் வியாபாரம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

OTT-யில் சூரரைப் போற்று ரிலீஸ்.. ரிலீஸ் தேதியோடு அதிகாரப்பூர்வமாக வெளியானது அறிவிப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சூரரைப்போற்று திரைப்படம் ரூபாய் 60 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. இந்த 60 கோடியையும் அப்படியே கொடுத்து அமேசான் ப்ரைம் நிறுவனம் இந்த படத்தை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் சாட்டிலைட் வியாபாரம் ரூபாய் 40 கோடிக்கு நடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன் மூலமாக சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மொத்தமாக ரூபாய் 100 கோடி வியாபாரம் ஆகி இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

ரிலீசுக்கு முன்னரே சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ரூபாய் 100 கோடி வரை வசூல் செய்திருப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.