Soorarai Potru Release Date
சூர்யாவின் சூரரை போற்று படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவலை தியேட்டர் உரிமையாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Soorarai Potru Release Date : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படமும் சூர்யாவின் நடிப்பில் சூரரை போற்று திரைப்படமும் ரிலீசாக உள்ளது.

இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் கோடை விடுமுறையில் மோதி கொள்ள இருப்பதாக கூறப்பட்டு வந்தது, அதன் பின்னர் மாஸ்டர் ஏப்ரல் 9-ம் தேதியும் சூரரை போற்று திரைப்படம் ஏப்ரல் 16-ம் தேதி ரிலீசாக இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன.

மாஸ்டரில் இருந்து லீக்கான மாளவிகா மோகனன் லுக் – வைரலாகும் புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள ரோகினி தியேட்டர் உரிமையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டீவீட்டில் சூரரை போற்று படத்தை ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறி பதிவிட்டுள்ளார்.

இதனால் சூர்யாவின் சூரரை போற்று படமும் விஜயின் மாஸ்டர் படமும் ஒரே நாளில் மோதுவது உறுதியாகி விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.