SK 16

SK 16 Details : சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக பயணத்தை தொடர்ந்து தன்னுடைய திறமையாலும் கடின உழைப்பாலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன்.

பிரபல நடிகரின் ட்ரைலரை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – நடு இரவில் நடந்த கலாட்டா.!

குறுகிய காலத்தில் மக்கள் மனதை கவர்ந்த நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் தற்போது நேற்று இன்று நாளை இயக்குனருடன் ஒரு படத்திலும் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து தன்னுடைய 15-வது படமாக இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.