
Vijay Fun Moment : பிரபல நடிகருடைய படத்தின் ட்ரைலரை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது மட்டுமில்லாமல் போன் செய்து கலாட்டா செய்துள்ளார் தளபதி விஜய்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 63 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தளபதி விஜயை பற்றிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் பிரபல நடிகரும் இயக்குனரான எஸ்.ஜே சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ட்ரைலரை இரவு 11 மணிக்கு மேல் பார்த்துள்ளார்.
ட்ரைலரை பார்த்த விஜய் அந்த இரவே எஸ்.ஜே சூர்யாவுக்கு போன் செய்து விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.
இந்த நிகழ்விற்கு பிறகு எஸ்.ஏ சூர்யாவை மெர்சல் படத்தில் நடிக்க வைக்க ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் நடிகைகளின் நடிப்பு பிடித்திருந்தால் அவர்களுக்கு நேரடியாக போன் செய்து வாழ்த்துவது தளபதி விஜயின் வழக்கமாக செயல் என்பது குறிப்பிடத்தக்கது.