இன்று வெளியாகும் அமரன், தீபாவளி வாழ்த்துடன் சிவகார்த்திகேயன் போட்ட பதிவு.!

Web Ads

இன்று அமரன் திரைப்படம் வெளியாக உள்ளதால் சிவகார்த்திகேயன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

sivakarthikeyan tweet about amaran movie
sivakarthikeyan tweet about amaran movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி திருநாளான இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த படம் உருவாகியுள்ளது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

இந்த படத்தில் முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயனும், முகுந்த் வரதராஜனின் மனைவியாக சாய்பல்லவியும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், பெருங்காதலும், ஒப்பில்லா வீரமும் ,தியாகமும் நிறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை பயணத்தை திரையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.