Sivakarthikeyan Movie : Sk 16 Movie | Pandiraj | Aishwarya Rajesh, Anu Emmanuel, D.imman, Cinema News, Kollywood , Tamil Cinema

Sivakarthikeyan Movie :

Sivakarthikeyan Movie : இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இதன் பாடல் பதிவு தற்போது துவங்கியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனா உருவெடுத்தவரு சிவகார்த்திகேயன்.

வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆலு வெந்தயக்கீரை தோசை – சமைக்கலாம் வாங்க!

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

இவங்க போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க. மேலும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

அண்மையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இதன் பாடல் பதிவு தற்போது துவங்கியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.