Aloo  Dosa Recipe :

தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) – 1 கப், உளுத்தம்பருப்பு – 2 1/2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு. உருளைக்கிழங்கு – 1/4 கிலோ,

தக்காளி – 1,
வெங்காயத் தாள் – 1 கட்டு,
பெரிய வெங்காயம் – 1,
வெந்தயக்கீரை – 1 கட்டு,
மிளகாய்தூள் – 1/4டீஸ்பூன்,
வெண்ணெய் – 1 பாக்கெட்.

பாரம்பரிய உணவான இட்லியை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

செய்முறை:

1) இட்லி அரிசியையும், உளுத்தம்பருப்பையும் தனித்தனியே ஊற வைத்து நன்றாக ஆட்டவும். உப்பு சேர்த்து முதல் நாள் மாலையே மாவை கலக்கிவைக்கவும்.

ஆலு மசாலா:

2) வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி, வேகவைத்த உருளைக்கிழங்கு, நறுக்கிய
வெங்காயத்தாள், கீரை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

3) உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வெந்ததும், சற்று சேர்ந்தாற்போல் இருக்கும்போது இறக்கவும். இதுதான் ஆலு மசாலா.

4) பின்னர் தோசைக்கல்லை காயவைத்து அதில் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி மூடி, வெந்ததும் அதன் மேல் சிறிது வெண்ணெயை எடுத்து ஸ்பூனால் தடவி, ஆலு மசாலாவை ஒரு பாதியில் வைத்து மறு பாதி தோசையை அதன்மேல் மடக்கி இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

5) சத்தான ஆலு வெந்தயக்கீரை தோசை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here