Pushpa 2

மீனா பேச்சை கேட்காத ரோகினி,மனோஜ்.. சந்தோஷத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.

மீனாவின் பேச்சை மனோஜ் மற்றும் ரோகினி கேட்க மறுக்கின்றனர்.

siragadikka asai serial episode update 14-12-2024
siragadikka asai serial episode update 14-12-2024

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் பூஜை ரூமில் பூஜை செய்து கொண்டிருக்க யார் பூஜை பண்றாங்க என்று வந்து பார்க்கின்றனர் மீனாதான் பண்ணுவாங்க என்று சொல்ல விஜயா அவ மட்டும் தான் பூஜை பண்ணுவா நாங்க எல்லாம் பண்ண மாட்டோமா என்று சொல்லுகிறார். பிறகு குடும்பத்தினர் அனைவரும் வர மனோஜ் எதுக்கு பூஜை பண்ற என்று கேட்க நான் சொல்றேன் என்று சொல்லி அனைவரையும் உட்கார சொல்லுகிறார்.

பிறகு வீடு வாங்கும் விஷயத்தையும் ஐந்து கோடி வீட்டை மூன்று கோடிக்கு வாங்க போவதாகவும் சொல்ல அது எப்படி இவ்வளவு கம்மியாக தருவாங்க என்று முத்துவும் ரவியும் கேட்கின்றனர். உடனே முத்து அது ஒருவேளை பேய் வீடா இருக்கும் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

உடனே விஜயா மனோஜை புகழ ஆரம்பிக்கிறார். நீ ரோகினிய கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் என்று ஆரம்பிக்க உடனே முத்து ஏழரை புடிச்சிருச்சு என்று சொன்ன ரோகினி முறைக்கிறார். இனிமே உன் வாழ்க்கை ராக்கெட் மாதிரி இருக்க போகுது என்று விஜயா புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். நான் கோவில்ல ரூ. 5 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கப் போறேன் ரெண்டு நாளைக்கு நம்ம அந்த வீட்ல போய் தங்க போறோம் என்று சொல்ல ரவியும் ஸ்ருதியும் வர மறுக்கின்றனர் ஆனால் மீனா சுருதியையும், முத்து ரவியயும் கூட்டிச்சென்று நீங்க ரெண்டு பேரும் வரலைன்னா அவங்க வீடு வாங்கறதுல உங்களுக்கு பொறாமை சொல்லுவாங்க ரெண்டு நாள் தானே நம்ம போயிட்டு வந்துரலாம் அதுவும் இல்லாம அஞ்சு கோடி விட மூணு கோடின்னு சொல்றாங்க ஏதாவது ஏமாந்து தொலைக்க போறான் போய் பாக்கலாம் என்று சொல்லி ரவியையும் மீனா ரோகிணி வீடு வாங்குவதில் நம்மளுக்கு பொறாமை நினைப்பாங்க வாங்க என்று கூப்பிட சுருதியும் வருகிறார்.

அண்ணாமலை பெரிய அமௌன்ட் கொடுத்து வாங்குற பத்திரமா உஷாரா இரு என்று சொல்ல விஜயாவிடம் போய் சர்க்கரை எடுத்துட்டு வா விஜய் என்று சொல்கிறார் எதுக்கு என்று கேட்க ஸ்வீட்டா இல்ல சக்கர எடுத்துக் கொண்டு வந்து கொடு என்று சொல்ல, முத்துவும் மீனாவும் சிரிக்கின்றனர்.

கோவிலுக்கு வந்த மீனா சத்யா சீதா மற்றும் அம்மாவிற்கு கையில் காசு கொடுக்கிறார். எதுக்கு காசு என்று கேட்க நான் பண்ண முதல் ஆர்டர் ஓட காசு உங்க கிட்ட கொடுக்கணும்னு நினைச்சேன் அதனாலதான் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு மாப்ள சவாரிக்கு தானே போயிருந்தார் என்று கேட்டால் ஆமா திருச்சிக்கு போயிருக்கார் என்று சொல்லுகிறார் அது உன்கிட்ட சொல்லிட்டு போய் இருக்கலாம் இல்ல கா என்று சீதா சொன்ன அது எப்படி சொல்லுவாரு என் மேல இருக்குற கோவத்துலதான போயிருக்காரு என்று சொல்லுகிறார். பிறகு முத்தம் நடந்து கொண்ட விஷயத்தை சொல்லுகிறார். ஆம்பளைங்க கிட்ட பார்த்து தான் பேசணும் என்று மீனாவின் அம்மா சொல்லிக் கொண்டிருக்க ரோகினியும் மனோஜ் கோயிலுக்கு வருகின்றனர்.

வாங்க ரோகினி என்ன கோயிலுக்கு என்று கேட்க அதான் நான் சொன்னேன் இல்ல இங்க காசு வாங்க வராங்க,அதுக்காக அர்ச்சனை பண்றதுக்கு வந்தோம் என்று சொல்ல சரி வாங்க நான் சொல்றேன் என்று சொல்ல இதுக்கு ஒன்னும் ரெக்கமண்டேஷன் எல்லாம் தேவையில்லை என்று சொல்லி விடுகிறார். மாலைய நம்ம கடையில வாங்கி இருக்கலாம் இல்லமா என்று சொல்ல நான் வெளியவே வாங்கிட்டு வந்துட்டேன் என்று சொல்லிவிட்டு சாமி கும்பிட போகும்போது வழியில் குடத்தில் இருக்கும் தண்ணீர் ரோகிணியின் கால் பட்டு கீழே கொட்டி விடுகிறது. இதனை கவனித்த மீனாவின் அம்மா இந்த சகுனம் சரியில்லை என்று சொல்ல மீனா நான் பொய் சொல்றமா என்று சொல்லுகிறார் வேணா நீ சொன்னா மட்டும் பொறாமைப்படுவது தான் சொல்லுவாங்க வேற எதுவும் சொல்லாத அவங்க போனதுக்கப்புறம் ஒரு தேங்காய் உடைத்துவிடு என்று சொல்லுகிறார்.

கொஞ்ச நேரம் கழித்து அட்வான்ஸ் வாங்க இரண்டு பேரும் வர மனோஜ் ரோகினியும் நீங்க 5 லட்சம் வச்சுக்கோங்க இன்னும் ரெண்டு நாள்ல நான் மீதி பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று சொன்ன உடனே அதுக்குள்ள இந்த ஒரு அக்ரிமெண்ட்ல கையெழுத்து போடுங்க என்று சொல்லுகிறார். மனோஜ் கையெழுத்து போட போகும் நேரத்தில் மீனா தடுத்து நிறுத்தி தண்ணி கொட்டுனது அபசகுணம் மாதிரி தெரியுது எதுவா இருந்தாலும் யோசிச்சிட்டு நாளைக்கு பண்ணுங்க என்று சொன்ன மனோஜ் மீனா சொல்வதும் சரியாகதான் இருக்கிறது என்று சொல்லுகிறார். உடனே அந்த நபர்கள் இவங்க சொந்தக்காரங்களா, அதுதான் பொறாமைல பேசுறாங்க என்று சொன்ன ரோகினியும் மீனா சொல்வதை கேட்காமல் நாம் இன்று அட்வான்ஸ் கொடுக்கலாம் என்று மனோஜிடம் சொல்ல அதற்கு மனோஜ் இவங்க கோயில்ல இருக்காங்க இவங்களுக்கு அந்த சகுனத்தை பத்தி தெரியும் என்று பேச உடனே அந்த நபர்கள் நாங்களும் இன்னைக்கு சகுனம் பார்த்துட்டு தான் வந்தோம் நாங்க வேற ஆளுக்கு கொடுத்துக்கிறோம் என்று சொல்ல இருவரும் அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு காசை கொடுக்கின்ற.

பிறகு என்ன நடக்கிறது? ரோகினி என்ன சொல்லுகிறார்? மீனா என்ன செய்யப் போகிறார்? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 14-12-2024
siragadikka asai serial episode update 14-12-2024