போட்டோவை தூக்கி எறிந்த சுந்தரவல்லி, கண் கலங்கிய நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் வெளியே கூப்பிட, நந்தினி வராததால் நந்தினியை மேலே சென்று கையைப் பிடித்து இழுத்து கீழே கூட்டி வருகிறார். நீ யாருக்கும் பயப்படாத என்று கூப்பிட்டு வெளியில் நிற்க வைக்கிறார். பிறகு சூர்யா டிக்கியில் இருந்து புடவை கவர்களை எடுத்து வந்து நீ மூணு பேருக்கு செய்ய நினைச்சதை எட்டு பேருக்கு செய். எட்டு பேர் பத்தலனா உனக்கு சொல்லு லாரில கூட்டிட்டு வர என்று சொல்லுகிறார். பிறகு நந்தினி கையில் இதில் ஸ்வீட்ஸ் எல்லாம் இருக்கு இன்னும் இங்கேயே எல்லாமே பண்ணு, யாரு இங்க பண்ணக்கூடாது சொல்லி உன்ன அசிங்கப்படுத்த நாங்களோ அவங்க முன்னாடியே இதை நீ பண்ணு யார் என்ன பண்றாங்கன்னு நான் பாக்குறேன் என்று சொல்லுகிறார்.
நந்தினி நீ ஏன் யோசிக்கிற எடுத்துக் கொடு அந்த முத்திப்போன மூஞ்சி எல்லாம் இருந்து பாக்குதுன்னு யோசிக்கிறியா நான் இருக்கேன், நீ தைரியமா பண்ணு நந்தினி என்று சொல்லுகிறார். நந்தினி என் கையைப் பிடித்து கூட்டி வந்து கொடுக்க சொல்ல நந்தினிக்கும் எல்லோருக்கும் கொடுக்கிறார். பிறகு சூர்யா அது எப்படி உங்களுக்கெல்லாம் ஒரு பொண்ணு செத்துப்போன அம்மாவுக்காக திதி கொடுக்கிறது எட்டி உதைக்கிறது தான் உங்களுக்கு கௌரவம் என்றெல்லாம் பேசுகிறார். உடனே சூர்யா விஜிஇடம் இது மாதிரி புடவை கொடுப்பதற்கான காரணம் என்ன என்று கேட்க கொடுக்கிறவங்களுக்கும் வாங்கி இருக்கிறவங்களுக்கு ஒரு புண்ணியம் கிடைக்கும் அதனால என்று சொல்ல ஆனால் இது என்னோட தாய் குலத்துக்கு பண்ண பாவம்தான் கிடைக்கும் என்று சொல்லுகிறார். நீங்க உங்க பொண்டாட்டி கிட்ட சொல்லிடுங்க டாடி அவங்களுக்கு இது மாதிரி திதி எல்லாம் கொடுக்க மாட்டேன் ஏன் கொல்லி கூட போட மாட்டேன் என்று சொல்லுகிறார். உடனே அசோகனை கூப்பிட்டு நீ என் அக்காவா தானே கல்யாணம் பண்ணி இருக்க அப்ப நீ பாவப்பட்டவன் தான் வந்து இத வாங்கிக்கோ புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி கூப்பிடுகிறார். சூர்யா வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லு அனுப்பி வைக்கிறார்.
பிறகு சூர்யா குடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க நந்தினி வருகிறார். சார் இதுவரைக்கும் இதுவரைக்கும் நான் உங்களுக்கு நன்றி சொன்னது இல்ல ஆனா இந்த விஷயத்துக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன் சார்,எனக்கு எங்க அம்மா நான் ரொம்ப புடிக்கும் எங்க வீட்ல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அம்மாவுக்கு சாமி கும்பிடுவது மட்டும் நான் மறக்க மாட்டேன். நான் முதலில் விஜி அக்கா வீட்ல தான் பண்ணலாம்னு சொன்ன ஆனா ஐயா தான் இங்க பண்ண சொன்னாரு. அது வெறும் பூப்பழம் தட்டு கிடையாது எங்க அம்மாவோட உயிர், அத எட்டி உதைக்கும் போது நடை பிணமாகிட்ட, ஆனால் நீங்க செஞ்சது எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு என்று சொல்லி பேசுகிறார். ஆனா ஒரு விஷயத்துல எனக்கு வருத்தமா தான் இருக்கு. இதையெல்லாம் பண்ணீங்க சரி ஆனா, உங்க அம்மாவ வெறுப்பேத்த தான செஞ்சீங்க என்று கேட்க, நீ நினைக்கிறது தப்பு, மத்த விஷயத்துல நீ சொன்னதெல்லாம் கரெக்டா ஆனா இந்த விஷயத்துல நான் யோசிச்சு தான் பண்ணேன். எந்த தாய்க்குலமாவது இப்படி பண்ணுவாங்களா? இவங்களா திமிரு புடிச்ச பேய். என்றெல்லாம் பேச சூர்யா நீ சூப்பர் நந்தினி கிரேட் என்று சொல்லுகிறார்.
அருணாச்சலம் சூர்யாவை சந்தித்து நீ பண்ணது ரொம்ப நல்ல விஷயம் பழைய சூர்யாவை பார்த்த மாதிரி இருந்தது என்று சொல்ல, சூர்யா சிரிக்கிறார். உடனே இதே மாதிரி சூர்யாவை நான் சீக்கிரம் பார்ப்பான்னு நினைக்கிறேன் அது மட்டும் இல்லாம நான் சொன்ன ஒரே வார்த்தைக்காக நீ குடிக்காம இருந்தா ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி, மாதவி, சுரேகா மற்றும் அசோகன் என அனைவரும் பேசிக் கொண்டிருக்க மாதவி இருந்தாலும் நீங்க இதெல்லாம் ஏமா தட்டி விடணும் என்று சொல்லி கேட்கிறார் என்ன பண்றது எல்லாம் பாத்துட்டு உட்கார்ந்து இருக்க சொல்றியா என்று சுந்தரவல்லி கோபப்பட அவளுக்கு இப்படியே விட்டா எல்லாத்துக்கும் சூர்யா அண்ணா வந்து நிற்கிற தைரியம் வந்துரும் ஏதாவது பண்ணனுமா என்று சுரேகா சொல்லுகிறார் எல்லாத்தையும் என்கிட்டயே கேளுங்க உங்க மூளை எங்க வச்சிருக்கீங்க என்று திட்டி விட்டு சுந்தரவல்லி சென்று விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் சுந்தரவல்லி நந்தினி மற்றும் சூர்யாவின் கல்யாண போட்டோவை தூக்கி எரிகிறார். நந்தினி விஜி இடம் ஃபோன் போட்டு அவங்க அம்மாவும் பையனும் ஏதாவது பண்ணிக்கிட்டு போறாங்க இதுல என்னோட வாழ்க்கை தான் சிக்கிய சின்னாபின்னம் ஆகுது என்று சொல்லுகிறார்.
மினிஸ்டர் வீட்டிற்கு கல்யாணம் ஆல்பம் எடுத்துக்கொண்டு வர நின்னுபோல கல்யாணத்துக்கு ஆல்பம் எடுத்துட்டு வரீங்களா போங்கடா என்று அனுப்ப அர்ச்சனா அவர்களை நிற்க சொல்கிறார். சூர்யா சுந்தரவல்லி தூக்கி எறிந்த போட்டோவை கையில் எடுத்து இந்த மாதிரி ஜோடி யாருக்காவது கிடைக்குமா உம்மா என்று முத்தம் கொடுக்கிறார் இந்த நாள் சுந்தரவல்லி கடுப்பாகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.