சார் படம் மாதிரி நடுரோட்டில் விட்டுட்டு போய்டாதீங்க.. நடிகர் விமலை விமர்சித்த தயாரிப்பாளர்..!
நடிகர் விமலை விமர்சித்து தயாரிப்பாளர் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் விமல். இவர் தற்போது இசக்கி கார்வண்ணன் இயக்கி, தயாரிக்கும் பரமசிவன் பாத்திமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் இவர் தயாரிப்பாளர் சிராஜ்.எஸ் தயாரிப்பில் சார் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சிராஜ் .எஸ், பரமசிவன் பாத்திமா படத்தின் போஸ்டரின் கீழ் கமெண்ட் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் @vimal.actor வாழ்த்துக்கள் மாப்பிள்ளை. இந்த படத்திற்காவது பிரமோஷனுக்கு போய் சப்போர்ட் பண்ணுங்க. நம்ம சார் படம் மாதிரி நடுரோட்டில் விட்டுட்டு போய்டாதீங்க.. இது என் தாழ்மையான கருத்து என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு இணையத்தில் வெளியாகி பேசும் பொருளாக மாறி உள்ளது.