Simbu in Upcoming Movies
Simbu in Upcoming Movies

சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Simbu in Upcoming Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகில் இன்று முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார்.

சிம்பு என்றாலே சர்ச்சை என்ற அளவிற்கு தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு வந்தார். இருப்பினும் அவரது ரசிகர்கள் அவரை கைவிடவில்லை.

இதனால் தற்போது ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வழக்கறிஞரான சூர்யாவின் ரீல் மகள்.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்!

இந்த படத்தை தொடர்ந்து ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வந்த மஃப்டி திரைப்படத்தின் ரீமேக்கில் மீண்டும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் திடீரென படம் கைவிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இதுவரை எவ்வளவோ சர்ச்சைகளை சந்தித்து விட்டோம். இனி சினிமாவில் தன்னை பற்றி யாரும் தவறாக பேசக் கூடாது. அதற்கேற்றார் போல நடந்து கொள்ள வேண்டும் என சிம்பு முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.